நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி இனிமேல் படம் வரைய மாட்டேன்:ஓவியர் ரொனால்ட் லோஸியர் அறிவிப்பு!

0

உலகம் போற்றும் உத்தமர், மனிதகுல வழிகாட்டி, 200 கோடி முஸ்லிம்களின் உயிர்நாடியான இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உருவம் கொடுத்து கேலிசித்திரம் வரைந்து உலக முஸ்லிம்களை கொதிப்படைய செய்த சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் கேலி சித்திர ஓவியர் ரொனால்ட் லோஸியர் இனிமேல் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி படம் வரையப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…

நான் முஹம்மது நபி பற்றி வரைந்த கேலி சித்திரங்களால் முஹம்மது நபியின் வலிமை என்ன என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவர்களை உயிருக்கு உயிராக நேசிக்கக்குடியவர்கள் இந்த உலகில் கோடிக்கணக்கில் உள்ளனர். முஹம்மது நபி பற்றிய எனது சித்திரங்கள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி விட்டது. எனவே இனிவரும் காலங்களில் முஹம்மது நபியை அவமதிக்கும் விதத்தில் எந்த சித்திரத்தையும் வரைய மாட்டேன்.

மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments are closed.