நம்பகத்தன்மையை இழந்த ஊடகங்கள்!

0

நம்பகத்தன்மையை இழந்த ஊடகங்கள்!

‘‘போர்க்களத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளை சேகரித்து ரிப்போர்ட் செய்திருக்கின்றீர்களா?” பாகிஸ்தானுக்கு எதிரான வெளிப்படையான போருக்கு இந்தியா தயாராகியே தீரவேண்டும் என்று ரிபப்ளிக் டி.வி.யின் நியூஸ் ரூமில் இருந்துகொண்டு முரண்டு பிடிக்கும் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட  ஊடகவியலாளர்களை நோக்கி சர்வதேச நேர்மையான பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்வி இது?

‘‘நியூஸ் ரூமில் இருந்துகொண்டு போருக்கு அழைப்பு விடுப்பது எளிது. ஆனால், போரின் பயங்கர அனுபவங்களை நேரடியாகக் செய்தி அளிப்பது குணாதிசயம் அவ்வாறல்ல’’ என்று லண்டன் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பிரிவு தலைவர் லிண்டா ரிஸ்ஸோ எழுதிய ‘‘ரிப்போர்டிங் ஃப்ரம் த ஃப்ரண்ட்” என்ற ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது. போர்க்களத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளை ரிப்போர்ட் செய்யும் எந்தவொரு பத்திரிகையாளரும் போரை புனிதப்படுத்தவோ, போர் நீடிப்பதற்கு ஊக்குவிக்கவோ செய்யமாட்டார்கள் என்பது இந்த ஆய்வில் முக்கியமாக கூறப்படும் உண்மையாகும். போர் நடக்கும் நாடுகள் மிக விரைவாக போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே, போரின் பயங்கரமான அனுபவங்களை நேரடியாகச் சந்திக்கும் பத்திரிகையாளரின் அறிக்கைகளில் காணப்படும் என்று லிண்டா ரிஸ்ஸோ எழுதுகிறார்.

எத்திக்கல் ஜர்னலிசம் நெட்வர்க்கின் நிறுவனரான எய்டன் வைட் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார். போர் மற்றும் மோதல்களை நேரடியாக களத்திற்குச் சென்று ரிப்போர்ட் அளிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, போரின் மூலம் ஏற்படும் அழிவுகளை குறித்தும் உயிரிழப்புகளைக் குறித்தும் தெளிவாகத் தெரியும். கண் முன்னால் காணும் இரத்தம் புரண்ட யதார்த்தங்களும், போரின் மனிதகுலத்திற்கு எதிரான பின்விளைவுகளும் பத்திரிகையாளர்களை அதற்கு எதிராகத்தான் சிந்திக்கத் தூண்டும். இத்தகைய சம்பவங்களுக்கு சாட்சியாக திகழும் இவர்கள் ஒருபோதும் தற்போது இந்திய தேசிய ஊடகங்களில் நடந்து வரும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வருகிறது என்ற ரீதியில் ரிப்போர்டுகளை அளிக்கமாட்டார்கள். … ???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ????????? ????? ?????????

Comments are closed.