நம்பிக்கை அளிக்கும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு!

0

நம்பிக்கை அளிக்கும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு!

டெல்லி தப்லீக் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 29 வெளிநாட்டினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக அமைந்தது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் உள்ள நீதிபதிகள் டி.வி.நலவாடே, எம்.ஜி.சேவில்கர் ஆகியோர் கொண்ட அமர்வின் அவதானிப்புகளும், அதனைத் தொடர்ந்து வழங்கிய உத்தரவும் அரசு நிர்வாகத்தின் தவறான நடத்தைகளை நீதித்துறை எவ்வாறு சரி செய்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

பல மாதங்களாக இந்தியாவில் சிக்கித் தவித்த ஐவரிகோஸ்ட், தான்சானியா, டிஜிபோட்டி, கானா, பெனின் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 29 வெளிநாட்டினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற அமர்வு காவல்துறையையும், மாநில அரசையும் கடும் விமர்சனங்களால் விளாசியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.