நரேந்திர மோடியின் கபட வேடம்!

0

நரேந்திர மோடியின் கபட வேடம்!

உலகிலேயே மிக உயரமான சிலையை அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் கேவதியா கிராமத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே திறந்து வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு கையாண்ட தந்திரமான நடவடிக்கைகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குறு நில மாகாணங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவரும், முதல் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையைத்தான் மோடி திறந்து வைத்தார். படேலின் சிலையை நிறுவியதன் மூலம் பா... தேச ஒருமைப்பாட்டின் ஏகபோக உரிமையை சொந்தமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறது. 2019ல் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், குறிப்பாக குஜராத்தில் படேலின் அரசியல் வாரிசுகள் என்று பரப்புரை செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதே இதன் நோக்கமாகும். சர்தார் வல்லபாய் படேலுடன் இந்துத்துவ அரசியலுக்கு இருக்கும் நெருக்கம் அனைவரும் அறிந்ததே! படேலின் சில நிலைப்பாடுகள் இந்த நெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆகையால் படேலின் அரசியல் வாரிசுரிமையை பா... சொந்தம் கொண்டாடுகிறது என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விஷயம்.

அதேவேளையில் சுபாஷ் சந்திரபோஸின் வாரிசுரிமையையும் ஏற்றெடுக்கும் மும்முரத்தில் பா... ஈடுபட்டுள்ளது. நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் 75-வது ஸ்தாபக தினத்தில் செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு நரேந்திர மோடி ஆற்றிய உரை கட்சியின் மேற்கண்ட நோக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. .என்..வின் தொப்பியை அணிந்து கொண்டு மோடி பேசும்போது தழுதழுத்தார். அடிக்கடி குரல் இடறியது. சுருக்கமாகக் கூறினால் அவர் நன்றாக நடித்தார். நேதாஜியை மதிக்கும் வங்காள மக்களை கவருவதற்கான தந்திரம். இது வங்காளத்தில் கட்சிக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்கான முயற்சிக்கு நேதாஜியை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவது நல்லதொரு தந்திரம்தான்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.