நரேந்திர மோடி செயலியில் பாதுகாப்பு ஓட்டை. ஹாக் செய்த 22 வயது இளைஞர்

0

மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞரான ஜாவித் காட்ரி என்ற இளைஞர் நரேந்திர மோடியின் செயலியை ஹாக் செய்துள்ளார். இதன் மூலம் அந்த செயலியை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் உட்பட பல தகவல்களை தன்னால் கைப்பற்ற முடியும் என்றும் அவர் பத்திரிக்கை ஒன்றிக்கு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த செயல் தீய எண்ணத்துடன் செயல்படுத்தப்பட்டது அல்ல என்றும் மாறாக பாதுகாப்பு கருதி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி செயலியில் உள்ள இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் ஏழு மில்லியன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே தெரியும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் Applab என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் இவர் தனது ஓய்வு நேரங்களில் இது போன்று பிரபல இணைய தளங்கள் மற்றும் செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி ஆராயும் வழக்கமுள்ளவர். அப்படி நரேந்திர மோடி செயலியை ஆராய்ந்த பொது தனக்கு அந்த செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாடு தெரியவந்ததாகவும் இந்த பாதுகாப்பு குறைபாடு மூலம் மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி, ஜிதேதிர சிங் ஆகியோரின் தகவல்களையும் அவர் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
yourstory-smriti-irani-hack

yourstory-modi-hack-2
மேலும் தனக்கு இது கடினமாக இருக்கவில்லை என்றும் மொத்தமாக அந்த செயலியை ஹாக் செய்ய வெறும் 20 நிமிடங்கள் தான் ஆனது என்றும் அவர் கூரியுள்ளார். தான் கண்டுபிடித்த பாதுகாப்பு குறைபாட்டை நரேந்திர மோடிக்கு ட்விட்டர் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மற்றொரு சம்பவத்தில்  ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டதை மோடி ஆதரவாளர்கள் நகையாடியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.