நரோடா காம் படுகொலை: மாயா கோட்னானி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

0

2002 குஜராத் கலவரத்தின் போது நரோடா காமில் ஒரு கலவர கூட்டத்தை வழிநடத்தி படுகொலைகளை முன்னின்று நடத்திய பா.ஜ.க. வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் மாயா கொண்டானி சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் இவ்வழக்கில் முக்கிய சாட்சியான கே.கே. மைசூர்வாலா என்பவரை மீண்டும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதாகும். இதனை சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவத்த சிறப்பு நீதிபதி பி.பி.தேசாய், இந்த மனுவை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் இவ்வழக்கு அக்கட்டத்தை என்றோ கடந்துவிட்டது என்றும் மீண்டும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் அது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது இந்த மனுவை மாயா கோட்னானி 2015 ஜூலை மாதம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 2002 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நரோடா காமில் நடந்த படுகொலையின் போது மைசூர்வாலா நரோடா காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது நடந்த படுகொலை தொடர்பாக இவரது வாக்குமூலம் இரண்டு 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்டது. ஆனால் மைசூர்வாலாவின் குறுக்கு விசாரணையின் போது சில முக்கியமான கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் மாயா கோட்னானி அவற்றை மறு ஆய்வு செய்ய வாய்ப்புத் தர வேண்டும் என்று நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்திய சிறப்பு புலனாய்வுக் குழு மாயா கோட்னானியின் இந்த மனு இவ்வழக்கை தாமதப்படுத்த செய்யபப்ட்ட சூழ்ச்சி என்று கூறியுள்ளது.

குஜராத் 2002 கலவரத்தின் போது நரோடா காம் பகுதியில் நடந்த வன்முறையில் 11 பேர் கொள்ளை செய்யப்பட்டனர்.

Comments are closed.