நரோடா பாட்டியா வழக்கு: நீதிபதிக்கு 22 மிரட்டல் கடிதங்கள்

0

புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தளத்தை சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்பட 30 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜோத்ஸனா யாக்னிக்கிற்கு 22 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
ஜோத்ஸனா யாக்னிக் ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு ஒய் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. நரோடா பாட்டியா கூட்டுப்படுகொலைக்கு தீர்ப்பு வழங்கிய சில மாதங்களில் ஜோல்ஸ்னா ஓய்வு பெற்றார்.அதன் பிறகு ஒரு இயக்கத்திடமிருந்து 22 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.மேலும் இரவு நேரங்களில் தொலைபேசி மூலமாகவும் மிரட்டல் வருவதாக அவர் புகார் அளித்துள்ளார்.அதேவேளையில் எந்த அமைப்பிடமிருந்து மிரட்டல் வந்தது?கடிதத்தின் உள்ளடக்கம் என்ன? என்பதை தெரிவிக்க நீதிபதி ஜோத்ஸனா யாக்னிக் மறுத்துவிட்டார்.

Comments are closed.