நரோடா பாட்டியா: விடுவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி!

0

நரோடா பாட்டியா: விடுவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி! 

-செய்யது அலி

2002ல் குஜராத் இனப்படுகொலையின்போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப்படுகொலையில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்ட மாயாபென் கோட்னானியை குஜராத் உயர் நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறி விடுவித்துள்ளது. இந்த கூட்டுப்படுகொலையில் தொடர்புடைய இன்னொரு முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கியின் ஆயுள் தண்டனையை 21 ஆண்டுகளாக குறைத்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாயா கோட்னானியின் உதவியாளரான கிர்பால் சிங்கையும் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் 32 நபர்களை குற்றவாளிகள் என்று உறுதி செய்த விசாரணை நீதிமன்றம், 29 நபர்களை விடுவித்தது. விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று உறுதி செய்தவர்களில் 18 நபர்களை தற்போது விடுவித்துள்ளது உயர் நீதிமன்றம். (விசாரணை காலத்தில் ஒருவர் மரணித்துவிட்டார்)

இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 97 முஸ்லிம்களின் கூட்டுப்படுகொலையில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டவர் அன்றைக்கு குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மாயா கோட்னானி என்பதை விசாரணை நீதிமன்றம் கண்டறிந்தது. இந்தியாவில் வகுப்புக்கலவரத்தில் முதன் முதலில் தண்டனை விதிக்கப்பட்ட மாநில அமைச்சர் என்ற அவப்பெயருக்கு சொந்தக்காரரான மாயா கோட்னானி 2007-ஆம் ஆண்டு குஜராத் மாநில அமைச்சராக பதவி வகித்தவர்.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மாயா கோட்னானியை உயர் நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. இத்தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவாரத்தின் சட்டரீதியான வெற்றியாக கருதப்படுகிறது. இந்துத்துவ தீவிரவாதம் தொடர்பான குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்தா, பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதன் தொடர்ச்சியே மாயா கோட்னானிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பு.

யார் இந்த மாயா கோட்னானி?
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.