நல்லொழுக்க முகாம் நடத்தியதற்கு வழக்கா?

0

நல்லொழுக்க முகாம் நடத்தியதற்கு வழக்கா?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நல்லொழுக்க பயிற்சி முகாம்களையும் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில்   இளைஞர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்தோடு முகாமில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 23ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு கார்த்திக் ஐபிஎஸ் தலைமையிலான  40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  முகாம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கலந்து கொண்டவர்களின் உடைமைகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கை காவல்துறை முழுமையாக சோதனை செய்தது. முகாம் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பு எங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டதால்  தான் நாங்கள் இங்கே வந்தோம் என்று சொல்லிவிட்டு சென்றனர்.  ஆனால் மறுதினம் பத்திரிகைகளில் பெரியபட்டினத்தில் பயிற்சி முகாம் நடந்ததாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகளை காவல்துறையினரே கொடுத்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களை பார்த்திபனூர், பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள காவல்துறையினர் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் பல்வேறு பயிற்சி முகாம்களை இதே மாவட்டத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் முகாம்களில்  நுழைந்து  காவல்துறை விசாரணை செய்யுமா?  அவர்கள் நடத்தும் முகாம்கள் காவல்துறைக்கு தெரியவில்லை எனில்  எங்கு முகாம்கள் நடைபெறுகிறது என்பதை நாங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம், பயிற்சி முகாமில் கலந்து கொண்ட  இளைஞர்களை காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை செய்யும் காவல்துறை தடையை மீறி வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜக உட்பட அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்துவார்களா? என்று பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் முகம்மது மன்சூர் கேள்வி எழுப்பினார்.

சமூக இடைவெளி, முகக் கவசம் உட்பட அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு அரசு அனுமதித்த எண்ணிக்கைக்கும் மிகக்குறைவான நபர்களே இந்த முகாமில் கலந்து கொண்ட நிலையில் வழக்குப் பதிவு செய்தது ஏன்? முகாமில் அத்துமீறி நுழைந்த காவல்துறையை கண்டிப்பதோடு பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்ÕÕ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முகம்மது ரஸீன் கூறினார்.

Comments are closed.