நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு!

0

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்துள்ளதாக தமிழகம் மற்றும் கேரளாவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

கோவையில் கடந்த இரு நாள்களாக பத்து நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகளும், மாநகர போலீஸாரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில், உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை 8 இஸ்லாமிய இளைஞர்களுக்கு சம்மன் கொடுத்து, கொச்சியில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதைத்தவிர கோவை மாநகர போலீஸார் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ விசாரணை குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது

. அந்த மனுவில், `சோதனை என்ற பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள். நள்ளிரவு நேரங்களைக்கூட பார்க்காமல் என்.ஐ.ஏ அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைகிறார்கள். இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். விசாரணையின் முடிவில் நாம் சாதாரண பயன்படுத்தும் செல்போன், லேப் டாப், சிம் கார்டுகள் போன்றவற்றைப் பறிமுதல் செய்துகொண்டு அதை மிகைப்படுத்தி பத்திரிகை செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். ஆகையால், அதைத் தடுக்க வேண்டும். சட்டப்படி நடத்தப்படும் அனைத்து விசாரணைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.