நவம்பர் மாதம் ஈராக்கில் ஏறத்தாழ 3000  பேர் பலி: ஐ.நா.

0

ஈராக்கில் நவம்பர் மாதம் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்களுக்கு இடையேயான தாக்குதல்களில் இதுவரை 2885 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தோடு மேலும் 1380 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த தாக்குதல்களில் 926 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 930 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இது குறித்த தங்களது மாத அறிக்கையில் 1959 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாகவும் 450 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் எண்ணிக்கையை விட 1093 கூடுதலாகும். இந்த கணக்குகள் ஈராக்கின் மேற்கு மாகாணமான அல்-அன்பார் மாகாணத்தை அங்குள்ள நிலையையை கருத்தில் கொண்டு  உள்ளடக்கவில்லை.

ஈராக்கில் நவம்பர் மாதம் மிகவும் சேதமடைந்த நகரமாக பாக்தாத் கருதப்படுகிறது. இங்கு மட்டும் 152 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 581 பேர் காயமடைந்துள்ளனர். மொசுலில் 332 மக்கள் கொல்லப்பட்டும்  114 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

படுகாயமடைந்தவர்களின் பொதுமக்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்று UNAMI  தலைவர் ஜான் குபிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 45 நாட்களாக இராக்கிய படைகள் அமெரிக்க ஆதரவு போர் விமானங்களின் துணையுடன் மொசுல் நகரத்தை கைப்பற்ற போராடி வருகின்றனர்.

Comments are closed.