நாக்பூரில் பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்..!

0

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நாக்பூரில், ராஷ்ட்டிர சந்த் துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை பாடங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அங்கு ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் புதிய பாடங்களை இணைந்துள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நாட்டுப்பணி என்ற பெயரில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் குறித்த பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்: .அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆர்.எஸ்.எஸ் பற்றி பாடம் வைப்பது தவறில்லை, அது நாட்டுப்பணி செய்ததாக எழுதி வைத்திருப்பதுதான் தவறு. துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ் செய்த நாட்டுப்பணி குறித்த விவரங்கள் எங்கிருந்து கிடைக்கும்? பிரிட்டிஷுக்கு ஆதரவாக இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த அமைப்பாகும், அதுமட்டுமல்ல, சுமார் 52 ஆண்டுகள் நாட்டின் தேசியக் கொடியையே தீண்டத்தகாததாக ஆர்.எஸ்.எஸ் வைத்திருந்தது. நமது அரசியலமைப்பு சட்டத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை” என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.