நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள்

0

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள்

நடந்து முடிந்த பதினேழாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட சிறிதளவு உயர்ந்துள்ள போதும் அவர்களின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இத்தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை 22 முஸ்லிம்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 49 முஸ்லிம் உறுப்பினர்கள் 1980 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2014 தேர்தலில்தான் குறைந்தபட்சமாக 22 பேர் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்தினர்.

2011 மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 14.2 சதவிகிதமாக இருந்தது. அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தில் 77 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் களின் மக்கள் தொகைக்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

கடந்த நாடாளுமன்றத்தை போலவே இம்முறையும் ஆளும் கட்சி சார்பாக எந்த முஸ்லிமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மொத்தம் 437 வேட்பாளர்களை களத்தில் இறக்கிய பாரதிய ஜனதா கட்சி, வெறும் ஏழு முஸ்லிம்களுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பளித்தது. அவர்களில் யாரும் வெற்றி பெறவில்லை. ஆளும் கட்சியின் சார்பாக முஸ்லிம்கள் நாடாளுமன்றத்தில் இல்லாதது சமூகத்தின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் விரிவாக அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை மறுக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பையே விரும்பாத ஒரு கட்சி அரசியலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை யாரும் நம்புவதற்கில்லை. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான லோக் ஜனசக்தி கட்சி சார்பாக ஒரேயொரு முஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கட்சியின் மெஹ்பூப் அலி கைசர் பீகாரின் ககாரியா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 423 வேட்பாளர்களை களத்தில் இறக்கிய காங்கிரஸ் கட்சி 32 முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது. அக்கட்சியின் சார்பாக நான்கு முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் எட்டு பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து போட்டியிட்டனர். இம்மாநிலத்தில் அக்கட்சி தான் போட்டியிட்ட 70 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.