நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போன நடைமுறையா

0

நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போன நடைமுறையா

உலகிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆக்கப்பூர்வமாக முன்னோக்கி செல்லும் நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற அமைப்பு முறையும், பல கட்சி ஜனநாயகமும் ஏதேனும் ஒரு நபரின் மூளையில் உதித்த திட்டமல்ல. இந்தியாவில் நடந்த சுதந்திர போராட்டங்களும், அவற்றிற்கு தலைமையேற்ற தேசிய இயக்கங்களும் அரசியல் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன. சுதந்திரத்திற்கு முன்பே நமது நாட்டில் மக்கள், கட்சி அடிப்படையில் அமைப்பாக திரண்டிருந்தனர். பிரிட்டீஷ் அரசு 1935-ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்திய அரசு சட்டம் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான அமைப்பு முறையை கூறியது. அதற்கேற்ப தேர்தல்களும் கட்சி அடிப்படையிலேயே சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவில் நடந்துள்ளன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.