நாடாளுமன்ற தேர்தலில்

0

நாடாளுமன்ற தேர்தலில்

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புது டெல்லியில் 6 மார்ச் 2019 அன்று முஸ்லிம் அரசியல் சந்திப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்தது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சமூக அரசியல் பின்னணியை கொண்ட அறிவுஜீவிகள், அறிஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். சமகால அரசியல் சூழலில் தேசம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து, சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த அவர்கள் உறுதி பூண்டனர். முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம், பிரதிநிதித்துவம், கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் பிற விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் இந்த சந்திப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இக்கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கைகளில் சேர்க்குமாறும் உரிய முறையில் நிறைவேற்றுமாறும் சிறுபான்மை உரிமைகளில் அக்கறை உடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இச்சந்திப்பு வலியுறுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் வாக்குரிமையை நிறைவேற்றும் பொழுது, இக்கோரிக்கைகள் குறித்து தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யுமாறு பொதுமக்களை, குறிப்பாக சிறுபான்மையின மக்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர். கூட்டமைப்பின் அடுத்தகட்ட பணியாக, நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது செயல்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளும் வாக்காளர்களுக்கு அவர்களின் உரிமைகளை தெரியப்படுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும். சிறுபான்மையினர் வாக்குகள் அதிக அளவில் இருக்கும் 100 நாடாளுமன்ற தொகுதிகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகம், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகள் மூலமாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் செயல் திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது. … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.