நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி:ராஜ்நாத் சிங்!

0

புதுடெல்லி: நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சமண மதத் தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டில் பசுக்கள் கொல்லப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய ராஜ்நாத் சிங், பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வருவதற்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார். இவ்விஷயத்தில் மத்திய அரசின் உறுதி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசு பசுவதை தடைச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதையும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ர அரசும் பசு வதைத் தடைச் சட்டத்தை கொண்டுவந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.