நாட்டின் அனைத்து துறைகளிலும் ஃபாசிச சக்திகள் நுழைந்துவிட்டன: அருந்ததி ராய்

0

நாட்டின் அனைத்து துறைகளிலும் ஃபாசிச சக்திகள் நுழைந்துவிட்டன: அருந்ததி ராய்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், நாட்டு மக்களுக்கு பல கனவுகள் இருக்கலாம், ஆனால் அதை நோக்கிய அவர்களின் முதல் நடவடிக்கை பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்குவதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “பாஜக போன்ற ஃபாசிச சக்திகள் அரசியலில் மட்டுமல்ல தேசத்தின் அனைத்து நிறுவனங்களிலும் புகுந்துவிட்டனர்.” என்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமரான பின்னர், சாதியமும் பெருநிறுவனத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். “முன்னர் முதலாளித்துவத்திற்கு எதிரான கம்யூனிஸ்ட்களின் போராட்டம், பெரும்பான்மையினருக்கு எதிரான சிறுபான்மையினரின் போராட்டங்கள், ஆதிக்கவர்க்கத்தினருக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் போராட்டங்கள் என அனைத்தும் தனித்தனியே பிரிந்து இருந்தது. இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று நமக்கு புரிய வைத்த மோடிக்கு நன்றி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியல் குறித்து பேசிய அவர், “அவர்கள் வாரிசு அரசியலை விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டிலோ அல்லது காங்கிரசோ வாரிசு அரசியலானாலும் அனைவரும் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். ஆனால் உண்மையான சாதியம், உண்மையான வாரிசு அரசியல் என்பது தொழிலாளிதிபர்களின் அரசியலில் உள்ளது. தொழிலதிபர்களின் குழந்தைகள் அவர்களது சொத்துக்களை நொடிப்பொழுதில் அடைந்து விடுகின்றனர். அவர்கள் நிலம், சுரங்கங்கள், எண்ணெய், அனைகள் ஊடகங்கள் இவை அனைத்துக்கும் மேலாக தகவல்கள் என அனைத்தையும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.