நாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி

0

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 நாட்களுக்கு முன் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இதனிடையே தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மோடி இரண்டு நாட்களுக்கு முன், மோதல் ஏற்பட்ட பகுதிக்கு முன்பாக சராசரியாக 250கி.மீ தொலைவில் உள்ள பகுதியை சுற்றிப்பார்த்தார். ஆனால் அப்பகுதிக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களை சந்தித்தது போல பாஜகவினரும் அதன் சார்பு ஊடகங்களும் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். ‘சீனா எங்கள் நிலத்தை அபகரித்து விட்டது என லடாக் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி சீனா நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இரண்டும் வெவ்வேறாக இருப்பதால், யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்,’ என கூறியுள்ளார்

பின்னர் மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சீன ஊடுருவலுக்கு எதிராக தேசப்பற்றுள்ள லடாக் மக்கள் குரல் எழுப்புகின்றனர். லடாக் மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எச்சரிக்கையை புறக்கணித்தால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். நாட்டின் நலனுக்காக தயவுசெய்து லடாக் மக்கள் சொல்வதை கேளுங்கள் என்று மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.