நாட்டுக்காக உயிரிழந்த வீரர் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்வதை தடுக்கும் உயர்சாதியினர்

0

நாட்டை பாதுகாக்கும் பணியில் தனது உயிரை தியாகம் செய்ய மத்திய ரிசர்வ் போலிஸ் படையை சேர்ந்த காவலர் உடலை அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் பொது மயான பூமியில் அடக்கம் செய்யக்கூடாது என்று உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்திர பிரதேசத்தின் ஃபிரோசாபாத் பகுதியின் நக்லா கேவால் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பணியில் உயிர்நீத்த காவலர் வீர் சிங் இன் உடல் பொது மயான பூமியில் அடக்கப்படுவதை உயர்சாதியினர் தடுத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட அதிகாரிகளின் தலையீட்டிற்கு பின் 10 க்கு 10 நிலம் ஒன்றை அவரது இரு சடங்கிற்காக தருவதற்கு சம்மதித்துள்ளனர் அப்பகுதி உயர்சாதியினர்.

உயிரிழந்த 52 வயதான வீர் சிங்கை தான் அவரது குடும்பம் தங்களது வாழ்வாதாரத்திற்கு நம்பி இருந்தது. இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் 1981 ஆம் ஆண்டு சேர்ந்தார். இவருக்கு முதுகலை பட்டம் பயின்று வரும் 22 வயது மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து வீர் சிங்கின் தந்தை கூறுகையில், “எனது மகன் தன் நாட்டை பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்துள்ளான். ஆனால் இங்கு இந்த மக்களோ ஒரு 10 க்கு 10 சதுர அடி நிலத்தை அவனது இறுதி சடங்கிற்கு தர மறுக்கின்றனர். இனி அவனது குழந்தைகளை யார் பார்த்துகொல்வார்கள்” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments are closed.