நான் என் இறைவனைத்தான் நேசித்தேன்!  -ஹாதியா!

0

நான் என் இறைவனைத்தான் நேசித்தேன்!  -ஹாதியா!

பருவ வயதை அடைந்த உயர்கல்வி பயின்ற ஒரு இளம்பெண் தனது சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட நேர்ந்த துரதிர்ஷ்டவசமான நிலையை நாளைய வரலாறு எவ்வாறு பதிவு செய்யும்? நமது அமைப்புமுறைக்கு என்ன நேர்ந்தது? ஹாதியாவின் இருள் சூழ்ந்த வாழ்வில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதியின் ஒளிக்கீற்றும் சுதந்திரத்தின் சுத்தமான காற்றும் நுழைந்த போதும் ஹாதியாவின் முகத்தில் கள்ளங்கபடமற்ற பணிவை மட்டுமே காண முடிந்தது. ஊடகங்களும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இடைவிடாது ஹாதியாவை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, தங்களது விலைமதிப்பற்ற நிமிடங்களை இழப்பதை குறித்த கவலையை மறைத்துக்கொண்டு ஷஃபின் ஜஹானோடு கல்லூரிக்கு புறப்படுவதற்கு முன்பு சம்பிரதாயங்கள் ஏதுமின்றி அவர் ஒரு மணிநேரத்தை ஒதுக்கி தேஜஸோடு உரையாடினார்.

வீட்டிலோ, கல்லூரியிலோ எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழலில் அகிலங்களை படைத்து பாதுகாக்கும் இறைவன் என்னை சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல பாதுகாப்பான் என்ற உறுதியான நம்பிக்கையில் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறினேன். -ஹாதியா

ஆறுமாத கால வீட்டுக்காவல். பத்திரிகை வாசிக்க முடியாது; டி.வி கிடையாது; .ஃபோனும் இல்லை; வீட்டு தோட்டத்தில் சற்று சுத்தமான காற்றை சுவாசிக்கவோ, பூக்களை கொஞ்சவோ சுதந்திரமில்லை. இந்த நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது. எவ்வாறு தாங்கிக்கொண்டீர்கள்? வெளியுலகில் நடந்த சம்பவங்கள் ஏதேனும் ஹாதியாவுக்கு தெரியுமா? ஷஃபின் ஜஹானோ, பாப்புலர் ஃப்ரண்டோ ஏதேனும் ஒரு தீர்வை காண்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு உறுதியாக இருந்தீர்களா?

ஹாதியா: நான் இஸ்லாத்தை தழுவும்போது என் முன்னால் பாப்புலர் ஃப்ரண்டோ, ஷஃபினோ கிடையாது. வீட்டிலோ, கல்லூரியிலோ எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழலில் அகிலங்களை படைத்து பாதுகாக்கும் இறைவன் என்னை சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல பாதுகாப்பான் என்ற உறுதியான நம்பிக்கையில் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறினேன். துவக்கத்தில் என்னோடு பயின்ற தோழிகள், அவர்களின் தந்தையர், சைனபா டீச்சர், சத்யசரணி, பாப்புலர் ஃப்ரண்ட், ஷஃபின்- இவர்களெல்லாம் எனது இறைவன் எனக்காக ஏற்பாடு செய்த அவனது உதவிகளே. வீட்டுக்காவலில் இருந்தபோதும் விடுதலைக்கான அல்லாஹ்வின் உதவி வரும் என்றே நான் நம்பினேன். என்னால் தாங்கமுடியாத ஒரு சூழல் ஏற்படும்போது அந்த உதவி என்னை வந்தடையும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். வெளியுலகில் நடப்பது குறித்து நான் அறிந்துகொள்வதற்கான வழிகள் ஏதும் இருக்கவில்லை.

பல்வேறு அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் ஹாதியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்ததில் தீவிரமாக பங்காற்றியுள்ளது குறித்து?

ஹாதியா: நான் அவர்களுக்கு மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளேன். அதைக் குறித்து இப்போதுதான் அறிந்தேன். எல்லோருடைய தொலைபேசி எண்களை வாங்கி அவர்களை அழைத்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறையில் ஊருக்கு வரும்போது முடிந்தால் அவர்களை சந்திக்க விரும்புகிறேன்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.