நாளிதழ் மீது அவதூறு வழக்கு

0

புதிய தமிழகம் கட்சி செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு.பவுன்ராஜ் தினமலர் நாளிதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

29/3/2016 தேதியிட்ட தினமலரில் “கிருஷ்ணசாமி பாதியில் ஓட்டம்” என்ற செய்தி பக்கம் 9 இல் வெளியாகியுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சு கையெழுத்திட நேற்று கோபாலபுரம் வீட்டிற்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாதி வழியில் திரும்பி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தங்கள் கட்சியின் புகழை தேர்தல் நேரத்தில் கெடுக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அவர் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் எதிரிகளாக தினமலர் பதிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் இலட்சுமிபதி, செய்தி ஆசிரியர் மற்றும் செய்தி நிருபர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.