நிச்சயமாக காஷ்மீர் தெற்கு சூடானாக மாறும்: நான் எச்சரிக்கிறேன்- வைகோ..!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து, மாநிலங்களவையில் வைகோ கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காஷ்மீர் மசோதா குறித்து பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடையாளத்துக்கும் பாதிப்பும் ஏற்படாது என்று நேரு உறுதியளித்த பிறகுதான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதனால் சிறப்பு அந்தஸ்து 370 மற்றும் 35ஏ சட்டங்கள் அரசியல் சேர்க்கப்பட்டன.

இன்று பாஜக காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரித்து, அடிப்படையிலிருந்து மீறியிருக்கிறது. புதுச்சேரி, மாநில அந்தஸ்து கோரி வரும் நிலையில், நீங்கள் காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியிருக்கிறீர்கள். காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறித்துள்ளீர்கள். இந்த நிலை ஏற்பட காங்கிரசும் ஒரு காரணம்.

மத்திய அரசின் இந்த முடிவால், நிச்சமாக காஷ்மீர் ஒரு தெற்கு சூடானாக, கிழக்கு தைமூராக மாறும். நான் எச்சரிக்கிறேன். இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக உருவாக்கப்படும். அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடும். 

எதிர்காலத்தை நினைத்து நான் மிகவும் வருந்தி, ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். காஷ்மீர் மக்களின் மனதில் தீ புகைந்து கொண்டிருக்கிறது. அதை பற்ற வைக்கும், தீப்பொறிதான் இந்த மசோதா. இந்த நாள் ஒரு அவமானகரமான நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

Comments are closed.