நிஜாமாபாத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தின் மீது தாக்குதல் – 4 வயது குழந்தை உட்பட பலர் காயம்

0

மார்ச் 18 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபத்தின் கோபன்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ வழியாட்டு தளம் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தினரருடைய தற்காலிக வழிபாட்டுத் தளமான அதனை நிறுவ அக்கிராம பஞ்சாயத் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு அந்த வழிபாட்டு தளத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், இந்த தீ எரிப்பிற்கு முன்னதாக அந்த வழிபாட்டு குழுவின் போதகரையும் அந்த குழுவை சேர்ந்தவர்களையும் 40 பேர் கொண்ட இந்துத்வ கும்பல் ஒன்று இவர்கள் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டி தாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது நடந்த இந்த தாக்குதலில் 4 வயது சிறுமி உட்பட பேர் காயமடைந்துள்ளனர். அந்த சிறுமியின் கால்கள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மத போதகர் நிதின் குமார் கூறுகையில், “அது மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. அவர்கள் என்னுடைய அங்கியை கிழித்தெறிந்தனர். எல்லா பக்கங்களில் இருந்தும் என்னை அடித்து உதைத்தனர். நான் தான் அவர்களின் முக்கிய இலக்கு. எங்களிடம் இருந்து பைபிள்கள் பிடுங்கப்பட்டு கிழித்தெறியப்பட்டன. வழிபாட்டு கூட்டத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் எல்லா திசையை நோக்கியும் ஓடத்தொடங்கினர். அவர்களையும் அந்த கும்பல் விடாமல் துரத்தியது.” என்று கூறியுள்ளார்.

கடந்த ஞாயிறு சத்திஷ்கர் மாதிலத்தில் உள்ள ஒரு பெந்தெகொஸ் ஆலயமும் இந்து போன்று வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்தியவர்கள் பஜ்ரங் தல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Comments are closed.