நியூசிலாந்து மசூதி தாக்குதல்: தீவிரவாதியை மன நல பரிசோதனை செய்ய உத்தரவு

0

நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை மன நல பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்தின் கறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் தீவிராதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்றம் அவர் மீது ஒரே ஒரு கொலை குற்றச்சாட்டு மட்டும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அந்த தீவிரவாதி நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.

இதையடுத்து, இன்று காலை மீண்டும் அந்த தீவிரவாதி நீதிபதி முன் வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மன நல பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஜூன் 14 ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.

Comments are closed.