நிலச் சட்டம் கவுரவப் பிரச்னையல்ல”: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி!

0

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கவுரவப் பிரச்னையாக நினைக்கவில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேசி கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

 நாட்டின் வளர்ச்சி கருதியே 2013ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியமிருந்ததாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார். சட்டத்தில் 9 திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளதாக கூறிய அவர், அதுதொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் பேசி முடிவுக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.