நிழல் இராணுவங்கள்

0

நிழல் இராணுவங்கள்

மத்தியில் -மீண்டும் ஆட்சியில் வீற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் குண்டர் படைகள் குறித்தான ஒரு நீண்ட கள ஆய்வின் மூலமாகவும் சந்திப்புகள், சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் வழக்குகளின் பின்புலங்களை வைத்து இந்துத்துவத்தின் கட்டமைப்பு கொண்ட தேசவிரோத இயக்கங்களின் வலை பின்னல் குறித்து விவரிக்கின்றார் எழுத்தாளர் திரேந்திர கே. ஜா. இவர் இதற்கு முன் பாபரி மஸ்ஜித் குறித்தான ‘அயோத்தியா தி டார்க் நைட்’ என்கிற நூலை இணைந்து எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பின்புலம் கொண்ட அமைப்புகளையும், அதன் சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்டு தன்னிச்சையாக செயல்படும் சில அமைப்புகளையும் பற்றிய நூலாக இது தொகுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.-ல் பல்வேறு கிளை அமைப்புகள் இருந்த போதிலும், இதில் விவரித்துள்ள அமைப்புகள் குறித்த விவரங்கள் மிகப்பெரும் கொலைக்கான, கலவரங்களை ஏற்படுத்தக் கூடிய, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தக்கூடிய, நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய தேசவிரோத சக்திகள் குறித்து விவரிக்கின்றது. சனாதன சன்ஸ்தா, பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, அபினவ் பாரத், இராஷ்ட்ர சிங் சங்கத், இந்து யுவ வாகினி, இந்து ஐக்கிய வேதி போன்ற பல அமைப்புகள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.