நீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்! ஸ்டாலினுக்கு சி.வி.சண்முகம் பதில்

0

நீட் மசோதாக்களை செப்டம்பர் 22 , 2017 ஆம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தமே என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 12 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் தற்போது வரை தமிழக அரசுக்கு எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து மீண்டும் நீட் மசோதா நிறைவேற்றப்படும். காரணத்தை சொல்லவில்லை என்றால் வழக்கு தொடருவதற்கு தயங்கவும் மாட்டோம்.

கடிதம் அனுப்பியதை மறுக்கவில்லை என்றும், இரண்டு ஆண்டுகளாக ஏன் அழுத்தம் தரவில்லை என மு.க.ஸ்டாலின் கேட்டார். இந்த கூட்டத்தொடரிலே மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மசோதா ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்று நீதிமன்றம் மூலமாக கேட்டு விளக்கம் பெறுவோம். அதே சமயம் மாணவர்கள் நலனுக்காக மீண்டும் மசோதாவை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது என்றார்.

Comments are closed.