நீதிக்கான போராட்டத்தில் தளராத கோபிநாத் பிள்ளை!

0

நீதிக்கான போராட்டத்தில் தளராத கோபிநாத் பிள்ளை!

-செய்யது அலி

இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட பிரணேஷ் குமார் பிள்ளை என்ற ஜாவேத் குலாம் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது  மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து திரும்புகையில் இவரது கார் விபத்திற்குள்ளானது.

கோபிநாத் பிள்ளை தனது மகனின் அநியாய படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவதற்காக வலுவான சட்டரீதியான போராட்டங்களை நடத்தியவர். புனேயில் மின்சார ஒப்பந்தக்காரராக இருந்த கோபிநாத் பிள்ளை ஆலப்புழாவில் என்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரஸில் உள்ளூர் தலைவராக பணியாற்றியவர். சமூக-கலாச்சார துறைகளில் பணியாற்றிக்கொண்டிரும்போதுதான் அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட சம்பவம் நிகழ்ந்தது. 2004-ல் அவரது மகன் அகமதாபாத்தில் வைத்து போலி என்கௌண்டரில் கொல்லப்பட்டார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த வேளையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப போலி என்கௌண்டர் படுகொலைகளை நடத்துவது வழக்கமாக இருந்தது. குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போதுதான் அதிக அளவில் என்கௌண்டர் படுகொலைகள் நிகழ்ந்தன.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.