நீதித்துறையை அவமதித்ததாக கூறி எகிப்து அதிபர் முர்ஸிக்கு மூன்று ஆண்டுகள் சிறை

0

எகிப்து மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸி மற்றும் மேலும் 19 நபர்களை அவர்கள் நீதித்துறையை அவமதித்ததாக கூறப்பட்டு மூன்றாண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் புரட்சி மூலம் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முர்ஸி ஜனநாயக முறையில் மக்களால் எகிப்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ராணுவ சதி மூலம் அதிபர் முஹம்மத் முர்ஸி யின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் இராணுவ தளபதி சிசி தன்னைத்தானே எகிப்தின் ஜனாதிபதி என்று அறிவித்துக் கொண்டார்.

இத்துடன் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் சிசி அரசால் தடை செய்யப்படடு அவ்வமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டமகா தண்டிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, முர்ஸி அவரது பதவிக்காலத்தில் நீதித்துறையை அவமதித்து பேசினார் என்றும் அவரது பேச்சு வெறுப்பை பரப்பும் விதத்தில் அமைந்தது என்றும் கூறி கைரோ குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டு காலங்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளதாக எகிப்து அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னதாக நடைபெற்ற தேர்தலில் முறைகேடு செய்தார் என்று முர்ஸி குற்றம் சுமத்திய ஒரு நீதிபதிக்கு முர்ஸி ஒரு மில்லியன் எகிப்திய பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட மேலும்  ஐந்து நபர்களுக்கு தலா 30,000 எகிப்திய பவுண்டுகள் வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

எகிப்து அதிபர் முஹம்மத் முர்ஸி அவரது பதவியில் இருந்து இராணுவ கிளர்ச்சி மூலம் பதவி இறக்கப்பட்டதும் அவர் மீது பல குற்றங்களை சுமத்தி வருகிறது எகிப்து அரசு. தற்போது¸ 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறையை தூண்டியதாக கூறப்பட்டு வழங்கப்பட்ட 20 ஆண்டு காலம் சிறை தண்டனை அவர் அனுபவித்து வருகிறார். கடந்த செப்டெம்பர் மாதம் கத்தார் அரசுக்கு அரசு ஆவணங்களை வழங்கியதாக கூறி அவருக்கு மற்றொரு 25  வருட கால தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.