நீதித் துறையில் அரசியல் தலையீடு

0

நீதித் துறையில் அரசியல் தலையீடு
-வழக்கறிஞர் K.நிஜாமுதீன்

1950 இல் இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்ட ஒரு சில வருடங்களிலேயே நாடாளுமன்றம், அரசியல் சாசனத்தின் 368வது பிரிவை (வரையறுக்கப்பட்ட அதிகாரம்) பயன்படுத்திஅரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏதிராக சட்டதிருத்தம் செய்ய தொடங்கியது.

1965ஆம் ஆண்டு சஜ்ஜன் சிங் எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் நாடாளுமன்றம் அரசியல் சாசனத்தின் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு வரைமுறையற்ற அதிகாரம் இருப்பதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது.

பின்னர் 1967இல் கோகல்நாத் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றம் முந்தைய சஜ்ஜன் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பை மாற்றி, அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடங்கிய அடிப்படை உரிமைகள் தொடர்பான விதிகளை மாற்றவோ திருத்தம் செய்யவோ நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.

அதை தொடர்ந்து இந்திரா காந்தி அரசு, கோகல்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியது. 1971&-1972 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகளை இந்திரா காந்தி அரசு உச்ச நீதிமன்றதுக்கு பரிந்துரை செய்தது. இதில் ஒரு சில நீதிபதிகள், ‘கோகல்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அரசுக்கு ஆதரவாக மாற்றி அமைக்கவே தாங்கள் உச்ச நீதிமன்றம் வந்துள்ளதாக’ கூறவும் செய்தனர்.

இந்த நிலையில், 1972ஆண்டு கேரளாவின் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக கேசவனந்த பாரதி என்பவர் தொடர்ந்த வழக்கு இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் உள்ளதா அல்லது வரைமுறையற்ற அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 66நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது என தீர்ப்பளித்தது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக செயல்படும் பா.ஜ.க. அரசு

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.