நீதிபதி லோயா மரணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வழங்க மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

நீதிபதி லோயா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கு பதிவு செய்த மனுதாரர்களிடம் அவரது மரணம் தொடர்பான ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கு முறையான நீதிமன்ற பெஞ்சிடம் விசாரணைக்கு வழங்கப்படும் என்றும் தாங்கள் இதனை மேலும் விசாரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி மோகன் M சந்தானகவ்டர் ஆகியோர் இந்த உத்தரவினை பிரப்பித்துள்ளனர்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பான ஆவணங்களை மகாராஷ்டிர அரசு வழங்கியதும் அதனை பொதுநல வழக்கு பதிவு செய்த மனுதாரரிடம் சீல் செய்த கவரில் கொடுத்த நீதிமன்றம் அதில் உள்ள விபரங்களை வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று கூறியுள்ளனர்.

சொராபுதின் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, அவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அமித் ஷா மீது கடுமை காட்டினர். அதனையடுத்து அவர் மர்மமான முறையில் மரணித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். பின்னர் தங்களுக்கு நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று தங்களது கூற்றை மாற்றி கூறினார். இந்த வாக்குமூலம் அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டடு பெறப்பட்டது என்று கூறப்படுகிறது.

முன்னதாக நீதிபதி லோயா மரணம் குறித்த விசாரணை தொடர்பாக நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதி மிஸ்ராவின் பென்ச் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் பாம்பே வழக்கறிஞர் சங்கம் இதே போன்றதொரு மனுவை பாம்பே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

ஆனால் நீதிபதி மிஸ்ராவின் பென்ச் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு அவர் விண்ணப்பித்த ஆவணங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “நீதிமன்றத்திடம் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார். நீதிபதி லோயாவின் மரணத்தில் உள்ள மர்மமான முன்னுக்கு பின் முரணான சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் தெஹ்சீன் பூனாவாலாவும் கேள்வி எழுப்பி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

Comments are closed.