நீதிபதி லோயா மர்ம மரணம் வழக்கு: மீண்டும் விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

0

நீதிபதி லோயா மர்ம மரணம் வழக்கு: மீண்டும் விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

நீதிபதி லோயாவின் மரணம் இயற்க்கையானது தான் என்று கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வழங்கப்பட தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி A.M. கான்வில்கர் மற்றும் நீதிபதி D.Y.சந்திரசூத் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி லோயா மரணம் குறித்த தீர்ப்பில் தலையிட எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறி நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்தை சிறப்பு புலனாய்வுத்துறை விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு ,”நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மீதான தாக்குதல் மற்றும் நீதி அமைப்புகளின் நம்பகத்தன்மையை நீர்த்து போக செய்யும் செயல்” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளியும் வைத்தது.

இதனை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த தீர்ப்பு பொதுநலனிற்கு எதிரானது என்றும் பாம்பே வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்த முழு தீர்ப்பும் மகாராஷ்டிர மாநில உளவுத்துறை ஆணையர் நடத்திய விசாரணையின் உறுதி செய்யப்படாத அறிக்கை ஒன்றை மையப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அபிடவிட் கூட தாக்கல் செய்யாமல் அரசு முழுமையாக இந்த அறிக்கையை மட்டுமே சார்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.