நீதிமன்றத்தில் NIA கைவிரித்ததால் பிணையில் விடுதலையானார் பிரக்யா சிங்

0

2008 மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனுவை விசாரித்து வந்த பாம்பே உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கும் முன் நீதிபதி, NIA சமர்ப்பித்த பிரக்யா சிங் தாகூர் மற்றும் இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான லெப்டினன்ட் கலோனல் புரோஹித் ஆகியோருக்கு இடையேயான உரையாடல் பதிவுகள் அடங்கிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், இவ்வழக்கை தேசிய புலனாய்வுத்துறை சரி வர விசாரணை செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதை தொடர்ந்து, குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல் குறித்த குறிப்புகளை நீதிமன்றம் முன் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவர்களின் இந்த குற்றச்சாட்டு பிரக்யா சிங் தாகூருக்கு பிணை வழங்குவதில் தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. (பார்க்க செய்தி)

இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்டவர்களின் சட்ட ஆலோசகர் பி.ஏ.தேசாய், “பிரக்யா சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்த போதுமான காரணங்கள் உள்ளன என்றும் UAPA சட்டத்தின் கீழ் அவர் மீது வலுவான குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்றும் இவை அனைத்தும் இந்த குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்கின் ஈடுபாட்டை சுட்டிக்கான்பிகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வழக்கில் NIA சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அணில் சிங், பிரக்யா சிங்கிற்கு எதிரான முக்கிய சாட்சி NIA வின் விசாரணையின் போது தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது என்றும் பிரக்யா சிங்கின் மீது போடப்பட்டிருந்த MCOCA சட்டம் உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது என்றும் கூறியிருந்தார்.

Comments are closed.