நீதியின் சிறிய ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன – அப்துல் நாஸர் மஃதனி

0

நீதியின் சிறிய ஒளிக்கீற்றுகள் தென்படுவதாக பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐந்து தினங்கள் தங்குவதற்கு நீதிமன்றம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து கொச்சி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த மஃதனி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது: நீதியின் சிறிய ஒளிக்கீற்றுக்கள் தென்படுகின்றன. பூரணமான சூரிய உதயம் விரைவில் தோன்றும் என எதிர்பார்க்கிறேன். பிறந்த நாட்டிற்கு வருகை தந்ததில் மிகவும் மகிழ்ச்சி. கேரளத்திற்கு வருகை தந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு கூட இயலாத நிலை. நான் மிகவும் விரும்பும் எனது பெற்றோர்களையும், கேரள மக்களையும் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நீதிமன்றம், கர்நாடகா அரசு தொடர்பான விவகாரங்களில் கூடுதலாக எதுவும் கூறுவதற்கில்லை. வழக்கு தாமதமாவதில் உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆகையால் கர்நாடகா உயர்நீதிமன்றம் நடவடிக்கைகளை விரைவுப் படுத்தியுள்ளது. கேரளாவில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி தெரிவித்தார்.
ஏப்ரல் 18 மதியம் 12.30 மணியளவில் ஏர் ஏசியா விமானம் மூலம் நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த மஃதனிக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பி.டி.பி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

Comments are closed.