நீரவ் மோடி செய்த மோசடியை விட ரூ.15,000 கோடி வங்கி மோசடி செய்த சகோதரர்கள்!

0

குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்த சந்தேசரா சகோதரர்களால் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதின் சந்தேசரா, சேடன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகிய மூவரும் போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.15,000 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள வங்கிகளில் ரூ.5,400 கோடி கடன் பெற்று மோசடி செய்ததற்காக அவர்களது மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், வெளிநாட்டுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளிலும் அவர்கள் ரூ.9,000 கோடியை கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள் 300 போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கி நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அமைக்க பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேசரா சகோதரர்களும் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.