நெல்லை ஏர்வாடியில் பயங்கரம்!

0

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காஜா முகைதீன் என்ற இளைஞரை சவாரிக்கு அழைத்து செல்லதுபோல் அழைத்து சென்ற மர்ம மனிதர்கள் ஊரிகுக்கு வெளியே உள்ள பகுதியில் வைத்து சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். நேற்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஊரில் பேக் கம்பெனி ஒன்றிலை வேலை பார்த்து வந்தவர் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் அந்த வேலையை விட்டு சமீப நாட்களாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். சமூக பணிகளில் ஆர்வம் கொண்ட இவர் பழனிபாபா பாசறை என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில்தான் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை திட்டமிட்டு அழைத்து சென்று படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊர் பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். காஜா முகைதீன் படுகொலை குறித்த செய்தியை காவல்துறைக்கு தெரிவித்தது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற விஷயங்களை எல்லாம் ஊரில் உள்ள இயக்கங்களிடம் தெரிவிக்கும் காவல்துறை இச்செய்தியை யாருக்கும் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளது.

மேலும் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இருக்க வெளியூரில் இருந்து ஒரு வாகனத்தை ஆம்புலன்ஸ் என்று கொண்டு வந்துள்ளனர். அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை என்றும் மற்ற ஆவணங்களும் ஏதும் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

eruvadi3அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழும் ஏர்வாடியில் அமைதியை குலைக்கும் வகையில் சில சக்திகள் சில ஆண்டுகளாக இங்கு வேலை செய்து வருகின்றன.எனவே காவல்துறை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
காஜா முகைதீன் படுகொலையை கண்டித்து ஏர்வாடியில் இன்று கடை அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள், அனைத்து இயக்கத்தினர் மற்றும் ஜமாஅத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை குற்றவாளிகளை கைது செய்யுமாறு அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்வதாக காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். மாலையில் அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்ததை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து  செய்தது.

இன்று (டிசம்பர் 22) மாவட்ட ஆட்சியரை சந்தித்த ஏர்வாடி ஒருங்கிணைப்பு குழுவினர் உண்மை கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் காஜா முகைதீன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கும் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

ஊரில் நடத்தப்பட்ட படுகொலை மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.