நெல்லை ஏர்வாடியில் முஸ்லிம் இளைஞர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

0

நெல்லை ஏர்வாடியில் ஹாஜா முகைதீன் என்ற இளைஞரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடினர். இது குறித்து நீதி விசாரனை நடைபெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் ஜாமாதினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதோடு உண்மையான குற்றவாளிகளையும் விரைவில் பிடிக்க வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்  “திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நேற்றைய தினம் (டிசம்பர் 21) காஜா முகைதீன் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த இவரை சவாரி செல்ல வேண்டும் என்று கூறி அழைத்து சென்று ஊருக்கு வெளியே வைத்து கொலை செய்ததன் மூலம் இது திட்டமிட்ட படுகொலை என்பது தெளிவாகிறது.

அனைத்து தரப்பு மக்களும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் ஏர்வாடியில் சில சமூக விரோத சக்திகள் பிரச்சனையை ஏற்படுத்துவதை கடந்த சில காலங்களாக வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது காவல்துறையும் அறிந்ததுதான். இந்த சமூக விரோத கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதுடன் காஜா முகைதீனை கொலை செய்தவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களிடம் உண்மை கொலையாளிகளை உடனடியாக கைது செய்வோம் என்று வாக்குறுதி அளித்த காவல்துறை அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் இந்த படுகொலையை தொடர்ந்து நடந்த சம்பங்கள் காவல்துறையினர் மீதான சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து மக்கள் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமையும் காவல்துறைக்கு இருக்கிறது என்பதை இங்கு நினைவு கூர்கிறோம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தி குளிர்காய விரும்பும் தேசவிரோத இந்துத்துவ சக்திகள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.