நெல்லை ஏர்வாடி கொலை வழக்கு: இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

0

கடந்த 21/12/2015 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாஸிச பயங்கரவாதிகளால் ஹாஜா முஹைதீன் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நெல்லை ஏர்வாடியை சார்ந்த ஐக்கிய ஜமாத், அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சர்வ கட்சிகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் விளைவாக காவல்துறை பாஸிச பயங்கரவாதிகள் 7 பேரை 30/12/2015 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட 7 பேரில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் இன்று போடப்பட்டுள்ளது.
1)கதிர் வேல் சாமி – பா.ஜ.க களக்காடு ஒன்றிய செயளாலர்
2)முத்து ராமன் – பா.ஜ.க களக்காடு ஒன்றிய பொதுச்செயலாளர்.

Comments are closed.