நெல்லை ரவுடி கிட்டப்பா என்கவுண்டர் வழக்கு -12 காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு

0

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கரிசூழ்ந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் கிட்டப்பா. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 40 க்கும்  மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த ஜூன் மாதம் இவர் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் பதுங்கி இருந்ததாகவும் இவரை கைது செய்ய சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலும் நடத்தியதாலும் இவரை சுட்டுகொன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தேசிய மனித உரிமை அமைப்பான NCHRO இது கொலையா இல்லை எதிர் தாக்குதலா என்பதை விசாரிக்க உண்மை அறியும் குழு ஒன்றை அனுப்பியது.

உண்மை அறியும் குழுவின் அறிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

போலீசாரின் கூற்றில் சந்தேகம் இருப்பதாக கூறி கிட்டப்பாவின் மனைவி மற்றும் உறவினர்கள் அப்போதே போராட்டம் நடத்தினர். மேலும் அவரை வேண்டுமென்ற கொலை செய்துவிட்டதாகவும் கிட்டப்பாவை கொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டிலும் புகார் மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி நசீர் அகமது பிப்ரவரி 8 ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில் “காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை சப்இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன், ஏட்டு கிரிஷ்ணசாமி, காவலர் சரவணசுந்தர் ஆகியோர் உட்பட 12 காவல்துறையினர் மீது நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.