நைஜிரியாவில் ஷியா இயக்கத்தை தடை செய்ய அதிபர் உத்தரவு!

0

நைஜிரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது கைது செய்யப்பட்ட ஷியா தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கி என்பவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டி அந்நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் நைஜீரியா ஷியா இயக்கத்தின் தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கியை மருத்துவ காரணங்களுக்காக ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவரது விடுதலையை முன்வைத்து அபுஜா நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா, ஷியா இயக்கத்தை தடை விதிக்க அதிபர் முகமது புகாரி நேற்று உத்தரவிட்டார்.

நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த தடையை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.

Comments are closed.