நோன்பு தர்பியத்தும் மகாஸிதும்

0

நோன்பு தர்பியத்தும் மகாஸிதும்

நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். உண்மையில் நோன்பின் மகாஸிதுகளைப் பற்றித்தான் அதிகம் இந்தக் கட்டுரை பேசப் போகிறது. எனவே நோன்பின் மகாஸிதுகள் என்றே தலைப்பிட்டிருக்கலாம். தர்பியத் என்பதும் நோன்பின் மகாஸிதுகளில் ஒன்றுதான். இருந்தும் தர்பியத் என்ற கருத்து தனித்து ஹைலைட்டாகும் வகையில் நோன்பு -தர்பியத்தும் மகாஸிதும் என்று தலைப்பிட்டமைக்கு என்ன காரணமாக இருக்கலாம்? நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் மையப் புள்ளியே அந்தக் காரணத்தைச் சுற்றித்தான் சுழல்கின்றது.

கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல்…

(1) தர்பியத் என்பது வணக்க வழிபாடுகளின் பிரதான மகாஸிதுகளில் ஒன்று. எல்லா வணக்க வழிபாடுகள் ஊடாகவும் மனித சமூகத்திடம் குறித்த சில பண்புகளை வளர்ப்பதை அல்லாஹ்தஆலா நோக்கமாகக் கொண்டிருக்கிறான். வணக்க வழிபாடுகளில் ஒன்று என்ற வகையில் நோன்பின் ஊடாகவும் குறித்த மக்ஸத் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு விஷேடம் என்னவென்றால் குறிப்பாக நோன்பின் மகாஸிதுகள் என பலராலும் பேசப்பட்ட அனைத்து மகாஸிதுகளும் ஏதேனும் ஒரு வகையில் மனித சமூகத்திற்கான தர்பியத்தாகவே காணப்படுகின்றன. அதாவது,  நோன்பின் ஒவ்வொரு மக்ஸதும் மனித சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒரு பண்பையே குறித்துக் காட்டுகின்றது. அந்த பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையிலேயே நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

முதலில் மகாஸித் என்ற கருத்தை கொஞ்சம் விளங்கிக் கொண்டு அடுத்த பகுதிக்கு வருவோம். மகாஸித் என்றால் என்ன? என்ற கேள்விக்கு எளிமையாகப் பதில் சொன்னால், தீனின் நோக்கங்கள், அதாவது இந்த தீனின் போதனைகளை அமுல்படுத்துவதன் மூலம் என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும் என்று அல்லாஹ்தஆலா எதிர்பார்த்தானோ அவைதான் மகாஸித். தீனின் நோக்கமாக அமையும். மகாஸிதின் பிரதான இயல்பு என்ன? அதனை இவ்வாறு வரையறுக்கலாம். உலகில் எது நிலைத்திருக்கக் கூடியதோ, எது பயன்தரக் கூடியதோ அதுதான் மகாஸித். இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது… “கழிவுகள் பயனற்றுப் போய்விடும். மக்களுக்குப் பயனளிப்பவைதான் பூமியில் நிலைத்து நிற்கும்” (ரஃத் -& 17) அதாவது உலகில் மனித வாழ்வு நீண்டு நிலைத்திருக்க அவசியமான அனைத்தையும் நாம் மகாஸித் என்போம்.

மகாஸித் என்றால் என்ன என்ற இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் தர்பியத் என்பதும் ஒரு மக்ஸதாகக் கருதப்படுகிறது. அடிப்படையில் தர்பியத் என்பது ஒரு வழிமுறைதான். இலக்கு அல்ல. ஆனால் தர்பியத் என்ற வழிமுறை இந்த உலகில் மறுமை வரையில் நிலைத்திருக்க வேண்டிய ஒரு வழிமுறை. முழு மனித சமூகத்திற்கும் பயனுள்ள அத்தியாவசியமான ஒரு வழிமுறை. அந்தவகையில் தர்பியத்தும் மகாஸித்களில் ஒன்றாகிறது. மொரோக்கோ இஸ்லாமிய அறிஞரான நூருத்தீன் கர்ராத் அவர்கள், பொதுவாக இஸ்லாமிய ஷரீஆவினதும், குறிப்பாக வணக்க வழிபாடுகளதும் தர்பியத் சார்ந்த மகாஸிதுகளைப் பேசும் பொழுது மிகப் பிரதானமாக மூன்று விசயங்களை முன்வைக்கிறார்.

(2) அதாவது, இந்த மூன்று பகுதிகளையும் மனித சமூகத்தில் பயிற்றுவிப்பது பொதுவாக ஷரீஅத்தினதும் குறிப்பாக வணக்க வழிபாடுகளினதும் நோக்கம் என்கிறார். இந்த நோக்கங்கள் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை என்கிறார். சம காலத்தில் இவை ஒவ்வொன்றும் வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகளாகவும் காணப்படுகின்றன.

  1. பலம் -& உடல், ஆன்மீக, அறிவு, ஆற்றல் பலங்கள் அனைத்தையும் இது குறிக்கிறது.
  2. அன்பு -& இந்த உம்மத் உடனான அன்பையும் கருணையையும் மனித இனத்துடனான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் இது குறிக்கிறது.
  3. பணிவு &- உயர்வு, தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய நிலையை இது குறிக்கிறது.

இந்த மூன்று மகாஸிதுகளையும் நோன்பு என்ற இபாதத்தில் பிரயோகித்துப் பார்த்தால் இந்த ஒவ்வொரு மக்ஸதையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடு நோன்பில் இருப்பதை அவதானிக்கலாம். இதற்கு ஆழ்ந்த ஆய்வு அவசியமில்லை. சாதாரணமான மேம்போக்கான பார்வையே இந்த உண்மையை உணர்த்தக் கூடியதாகும்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.