பகுத்தறிவுவாதிகளின் கொலை: விசாரிக்க உச்ச நீதிமன்ற முடிவு

0

பிரபல பகுத்தறிவுவாதிகளான M.M.கல்பர்கீ, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலை வழக்கு இவர்களை ஒரே குழுக்கள் தான் கொலை செய்தது என்ற வாதத்துடன் கடந்த புதன் கிழமை உச்ச நீதிமன்றத்தின் கவனத்தின் கீழ் வந்துள்ளது.

இதனையடுத்து கல்பர்கியின் மனைவி உமா தேவி அளித்த மனுவை சிறப்பு புலனாய்வுக் குழு கொண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. உமா தேவி தனது கணவரின் கொலை தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளது என்று தனது மனுவில் குறிபிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிலளிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீத்பதிகள் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசு, தேசிய புலனாய்வுத்துறை, சி.பி.ஐ. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில அரசுகள் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அளித்து இதற்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தபோல்கர் புனேவில் வைத்து கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி பன்சாரே மகாராஷ்டிரா மாநிலம் கொல்கபூரில் வைத்து கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கல்பர்கி கொலை செய்யப்பட்டார் இந்த மூன்று கொலைகளிலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்று தான் என்பது உமாதேவியின் வாதம்.

இது குறித்து உமாதேவி, “இந்த மூன்று பேரும் துன்புறுத்தப்பட்டு, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரால் மிரட்டப்பட்டனர்.” என்று கூறியுள்ளார். மேலும் கர்நாடக அரசால் தங்கள் மாநில CID இன் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்ட போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கு விசாரணையை கர்நாடக அரசு இழுத்துவருகிறது என்றும் இந்த கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு 2009 கோவா குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்புகள் உள்ளது என்றும் அவர்கள் தற்சமயம் நாட்டை விட்டே வெளியேறி இருக்கலாம் என்றும் தற்போது இந்த விசாரணை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ரிட் மனு மூலம் உச்ச நீதிமன்றத்திடம் அது தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைத்து இவ்வழக்கை விசாரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் இந்த கொலைகாரர்களை தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்கு மற்றும் கோவா குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்ய NIA முயற்சித்து வருகிறது என்று தனது மனுவில் குறிப்பிட்ட உமா தேவி, கோவா குண்டுவெடிப்பு வழக்கில் வெகு சிலைரை மட்டுமே NIA விசாரித்துள்ளது என்றும் அந்த விசாரணையும் அவர்களின் விடுவிப்பில் முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் கோவா மாநில அரசோ இவ்வழக்கை NIA விசாரிக்கிறது என்று கூறி அமைதி காக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

Comments are closed.