பக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

2

ஹஜ்ஜுப் பெருநாளின் போது விலங்குகளை அறுத்து குர்பானி கொடுப்பது காட்டுமிராண்டித்தனமானது என்றும், மனிதத் தன்மையற்றது என்றும் இதனை மத வழிபாடு என்கிற பெயரில் அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் மூலமாக உத்திர பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் சேர்ந்து தாக்கல் செய்த இந்த பொது நலவழக்கில் தியாகத் திருநாளில் எந்த ஒரு விலங்கையும் அறுத்து பலியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விலங்குகளை அறுத்து பலியிடுவது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் இதனை பொதுமக்கள் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

மிருக வதையை தடை செய்யும் அரசியல் சாசனப் பிரவு Section 28ல், “எந்த ஒரு மத வழிபாட்டிற்காகவும் விலங்குகளை கொலை செய்வது குற்றமாகாது” என்றுள்ள நிலையில் அந்த அரசியல் சாசனப் பிரிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தியாகத் திருநாளின் போது சாலைகளிலும், தெருக்களிலும், விலங்குகளை அறுப்பது பெருகி வருகிறது என்றும் பொது இடங்களில் பல லிட்டர் இரத்தம் ஓடுவது பல மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றது என்று கூறியுள்ளனர்.

Discussion2 Comments

  1. விலங்குகளின் இரத்தத்தை குடிப்பவர்கள், கலவரங்களை ஏற்படுத்தி மனிதர்களின் இரத்தத்தை ஓட்டும் இவர்கள் நல்லவர்களாம்.

    உணவிற்காக வளர்க்கப்பட்ட பிராணிகளை விலை கொடுத்து வாங்கி அதை அறுத்து ஏழை எளிய மக்களுக்கு தர்மமாக தரும் முஸ்லிம்கள் மனித தன்மை அற்றவர்களா.

    எங்களுடைய பெருநாள் பண்டிகைகள் காசைக் கரியாக்குவதையோ மற்றவர்கள் மனதை புண்படுத்துவதையோ அல்லது கலவரங்கள் செய்வதையோ ஊக்குவிப்பதில்லை.

    மாறாக ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்வதை மட்டுமே வலியுறுத்துகிறது.

  2. இவனுகளுக்கு முஸ்லிம்களின் விஷயத்தில் மட்டும் ஏதாவது சொல்லி கழகத்த ஏற்படுத்துவானுக.நல்ல வேளை சட்டத்தில ஏதாவது இருந்திருந்தா ஒட்டக அறுக்கிற கதைதான்.இவனுக விஷயத்திலும் பொது இடத்தில இந்துத்துவ இயக்கங்கள் சிலை வைக்கக்கூடாது போன்ற நெருக்கடியை ஏற்படுத்தனும்.