பசுக்களை கடத்தியதாக கூறி பா.ஜ.க தொண்டரை அடித்துக் கொன்ற வி.ஹச்.பி. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்

0

கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே உள்ள சந்தேகட்டே பகுதியில் பிரவீன் பூசாரி மற்றும் அவரது நண்பரான அக்ஷய் தேவடிகா ஆகியோர் பிரவீன் பூசாரிக்கு சொந்தமான டெம்போ ஒன்றில் இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வி.ஹச்.பி. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இவ்விருவர் சென்ற டெம்போவை வழிமறித்து இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். சுமார் 35 ஈடுபட்ட இந்த தாக்குதலில் பிரவீன் பூசாரி உயிரிழந்துள்ளார். அக்ஷய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன் இரவு நடைபெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 17 பேரை கைது செய்துள்ளது ஹெப்ரி காவல்துறை. மற்றவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதலை வி.ஹச்.பி.யை சேர்ந்த அரவிந்த் ஷேரிகர் என்பவர் துவங்கிவைத்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Comments are closed.