பசுக்களை கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை – ஹரிஷ் ரவாத்

0

பசுக்களை கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை இல்லை:சங்க்பரிவார் வழியில் உத்தரகாண்ட் காங்.முதல்வர்?

ஹரித்துவார்:பசுவதை, மாட்டிறைச்சி விவகாரத்தில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஸ் ராவத் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது’ என்றார். “பசுவை கொபவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி, அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை கிடையாது,” என்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
தனது அரசில், பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை தான் தாக்கல் செய்ததாகவும், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவணமும் வழங்கிவருகிறது என்றும் ஹரிஷ் ராவத் கூறிஉள்ளார். இச்செய்தியை என்.டி.டி.வி வெளியிட்டுள்லது.பசுவதை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் கருத்து அமைந்து உள்ளது.தாத்ரி சம்பவம் பற்றி, அரியானா முதல்–மந்திரி கட்டார் அண்மையில் கூறும்போது முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்றால், மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹரிஸ் ராவத் மறுப்பு:தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஹரிஸ் ராவத் மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:’நான் இத்தகைய முட்டாள்தனமானமாக பேசவில்லை.இந்த அறிக்கை என்னைக் குறித்து தவறாக வெளியாகியுள்ளது.ஏழைகளின் பொருளாதாரம் தொடர்பாக பசு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது குறித்துதான் பேசினேன்’ என்று ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.