பசு குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரது மகன் மீது வழக்கு: ஜெய்பூரில் SDPI ஆர்ப்பாட்டம்!

0

பெஹ்லுகான் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிந்துள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து SDPI ஜெய்பூரில் ஆர்ப்பாட்டம்

பசு குண்டர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிந்துள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும், அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகானுக்கு நீதி வேண்டியும் 03-07-2019 புதன் கிழமை அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் SDPI கட்சியின் ராஜஸ்தான் மாநில பொதுச்செயலாளர் அஷ்ஃபாக் ஹுஸைன், மாநில செயலாளர் சஹாப்தீன் கான், SDPI மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஹித் மிர்ஸா, ஜெய்பூர் மாவட்ட தலைவர் ஹாலித் மன்சூர், மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர் அலி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Comments are closed.