பசுபாதுகாவல் என்கிற பெயரில் ஊழல்: உணவில்லாமல் பசியால் பசுக்கள் பலி

0

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார பசு பாதுகாப்பு மையம் என்று அடையாலப்படுத்தபப்டும் உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு பசு பாதுகாப்பு மையத்தில் கடந்த ஐந்து மாதங்களில் நான்கில் ஒரு பசு உயிரிழந்துள்ளது.

128 வருடங்கள் பழமையான கான்பூர் பசு மையத்தில் கடந்த வாரம் மட்டும் நான்கு பசுக்கள் உயிரிழந்துள்ளன. இந்த பசுக்கள் பசியால் வாடி உயிரிழந்துள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உயிரிழந்த நான்கு பசுக்களுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்தலில் அவைகளுக்கு காலியான குடல்களும் சிறுநீரக பைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக இந்த பசுக்களுக்கு உண்ண எதுவும் வழங்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த பசு பாதுகாப்பு மையத்தில் மட்டும் மொத்தம் 540 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 152 பசுக்கள் உயிரிழந்துள்ளன. இந்த மையத்தை பராமரித்து வரும் சங்கத்திற்கு  என்று சுமார் 220 கோடி சொத்துக்கள் இருக்க இங்கிருக்கும் பசுக்கள் பசியால் உயிரிழந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சங்கத்திற்கு கோடி கொடியாக நன்கொடைகள் வந்து குவிகின்றன என்றும் அந்த பணம் அனைத்தும் எங்கு சென்றது என்று அந்த சங்கத்தை சேர்ந்த ஒருவரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மாட்டிறைச்சி உண்டார் என்ற ஒரு போலியான குற்றச்சாட்டை முன் வைத்து ஒரு குடும்பம் தாக்கப்பட்டு ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட ஒரு மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையத்தின் நிலை இப்படி எனபதில் இருந்து பசு பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கும்பலின் நோக்கம் என்ற என்று தெளிவாகிறது.

Comments are closed.