பசுவதை தடை வேண்டி பொதுநல வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

0

தேசம் முழுவதுமாக பசுக்களை அறுப்பதற்கு தடை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் பசுக்களை ஒரு மாநிலத்தில் இருந்து வேற்று மாநிலங்களுக்கு அனுப்புவதை ஏற்கனவே தாங்கள் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  மகாராஷ்டிராவில் உள்ள சுமார் 36 மாட்டிறைச்சி வர்த்தக அமைப்புகள் அங்கு நடப்பில் உள்ள பசு வதை தடை சட்டத்திற்கு எதிராக மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்திருந்தன. அந்த மனுவில் பசு, காளை உட்பட கால்நடைகளை அறுப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் மகாராஷ்டிரா அரசு 2015 இல் கொண்டு வந்த மகாராஷ்டிரா மிருக பாதுகாப்பு சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தான் இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர். மகாராஷ்டிரா அரசின் இந்த சட்டம் மாடுகளை அறுப்பது, மாட்டிறைச்சி வைத்திருப்பது, உண்பது மற்றும் ஏற்றுமதி செய்வதை அம்மாநிலத்தில் தடை செய்கிறது.

முன்னதாக 1976 ஆண்டு மகாராஷ்டிர மிருகங்கள் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்து காலை, பசு போன்ற கால்நடைகளை அறுப்பதற்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து பாம்பே உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது பாம்பே உயர் நீதிமன்றம்.

Comments are closed.