பசுக்களை தாயாக மதிக்காதவர்கள் மற்றும் பசுவை கொல்பவர்களின் கை கால்களை உடைப்பேன் என்று உத்திர பிரதேசத்தின் கடவ்ளி பகுதி பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சைனி என்பவர் கூறியுள்ளார். இவர் 2013 முஸஃபர் நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திர பிரதேச மந்திரி சுரேஷ் ரானா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய இவர், ‘நான் ஒரு சத்தியம் செய்துள்ளேன். அது வந்தே மாதரம் கூற தயங்குபவர்கள், பாரத் மாதா கி ஜெய் கூற வருத்தப்படுபவர்கள், பசுவை தாயாக மதிக்காத பசுவை கொள்பவர்கள் ஆகியோர்களின் கை கால்களை உடைப்பது” என்று கூறியுள்ளார்.
மேலும் தான் தனது சத்தியத்தை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் இதற்கென இளைஞர்களை கொண்ட குழு ஒன்றை தயாராக வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சர்ச்சை சாமியார் யோகி அதித்யநாத் உத்திர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றத்தில் இருந்து பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் இது போன்ற பேச்சுக்களும் வன்முறைகளும் அதிகரித்த வன்னம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.