பசுவை கொல்பவர்களை தூக்கிலிடுவோம்: சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்

0

பசுவை பாதுகாக்க மனிதனை வதைக்க விரும்புவோர் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும் இணைந்துள்ளார். ‘பசுவை கொல்பவர்களை நாங்கள் தூக்கிலிடுவோம்” என்று கூறிய அவர் சத்திஸ்கரில் கடந்த 15 வருடங்களாக எந்த பசுவும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாஜகவின் எம்.எல்.ஏ. விக்ரம் சைனி பசுவை தங்களது தாயாக என்று மதிக்காதவர்கள் மற்றும் பசுவை கொல்பவர்களின் கை, கால்களை உடைக்கப்போவதாகவும் இதற்கென இளைஞர் படை ஒன்றை தான் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். (பார்க்க செய்தி)

மேலும் சமீபத்தில் குஜராத்தில் பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக எதிர்நோக்கி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வரான யோகி அதித்யநாத், தான் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்றதும் மாநிலம் முழுவதும் பசு வதைக்கு தடை செய்தார். இவர் பதவியேற்றதும் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன. ஆனால் சட்டவிரோதமாக இயங்கும் இறைச்சிக் கூடங்கள் மட்டும் தான் மூடப்படுகின்றன என்று அவர் விளக்கம் கூறினார்.

மாட்டிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஆதார் அட்டை வழங்க அரசுகள் முன் வரும் நிலையில் மனிதவள குறியீடுகளின் வளர்ச்சியைக் காட்டிலும் மாடுவள குறியீட்டின் வளர்ச்சி அதிகம் உள்ள நாடாக இந்தியா விரைவில் உருவெடுத்தால் அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

Comments are closed.